மறைந்த மகத்தான கலைஞர்கள் நிரோஷன் மற்றும் ரோஜிதன் நினைவாக
குறும்படப்போட்டி -2025
குறும்படத்தை உருவாக்க வேண்டிய கருப்பொருள் "மனித நேயம்" இதனை அடிப்படியாக கொண்டு உங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும்.
தலைப்பு (Title Credits) உட்பட அதிகபட்ச நீளம் 10 நிமிடங்கள் ஆக இருக்க வேண்டும்.
கதையும் படைப்பும் பூரணமாக உங்கள் சொந்த முயற்சியாக இருக்க வேண்டும்.
முன்னதாக எங்கும் வெளியிடப்பட்ட / உருவாக்கப்பட்ட படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
டிசம்பர் 15, 2025 க்கு பிறகு உருவாக்கப்பட்ட குறும்படங்களே போட்டிக்காக செல்லுபடியாகும்.
குறும்படத்தில் பயன்படுத்தப்படும் இசை சொந்தமாக உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,
AI மூலம் உருவாக்கப்பட்ட இசை பயன்படுத்தக்கூடாது.
பதிப்புரிமை (Copyright) உள்ள மற்றவர் இசை பயன்படுத்த அனுமதி இல்லை.
AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள்/பாத்திரங்கள் தடைசெய்யப்பட்டவை.
வீடியோ தரம் குறைந்தது 1080p Resolution ஆக இருக்க வேண்டும்.
இலங்கையின் எந்த இடத்திலிருந்தும் படைப்புகளை அனுப்பலாம்.
குறும்படங்களை அனுப்ப வேண்டிய இறுதி திகதி: ஜனவரி 31, 2026.
இந்த திகதிக்குப் பிறகு வரும் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
குறும்படத்தை Google Drive, MediaFire போன்ற cloud storage-இல் upload செய்யவும்,
அதன் link-ஐ எமது வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
எமது வலைத்தள விண்ணப்பம் மூலமாக அனுப்பப்படும் படைப்புகளே செல்லுபடியாகும்,
Email / WhatsApp / நேரடி அனுப்புகை எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.
விதி முறைகளுக்கு அமைவாக அனுப்பப்படும் அனைத்து படைப்புகளும் எமது நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் (social media platforms) பதிவேற்றப்படும்.
நடுவர் குழு தேர்வு செய்யும் வெற்றி பெரும் ஒரு படத்துக்கு இலங்கை ரூபாய் ஒரு லட்சம் மற்றும் இயக்குனருக்கு விருதுகள் வழங்கப்படும்.
கூடுதலாக பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கும் குறும்படம் ஒன்றுக்கு சிறப்பு (Audience Choice Award) வழங்கப்படும்.
போட்டிக்கான எந்தவொரு கட்டணமும் இல்லை. (Free Entry).


வழங்கும்
குறும்படத்தை அனுப்ப கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் !!
குறும்படத்தையும் குறும்படத்தின் போஸ்டர்யும் Google Drive, MediaFire போன்ற cloud storage-இல் upload செய்து link ஐ கீழே உள்ள விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவும் !!



